MEGA JOBS WALK IN INTERVIEW ( 40+ COMPANY PLACEMENT) 17/8/2019 in kaayalpattinam, Tamil Nadu Don't miss it.
MEGA JOBS WALK IN INTERVIEW ( 40+ COMPANY PLACEMENT) 17/8/2019 in kayalpatnam,Tamil Nadu Don't miss it
காயல்பட்டினத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!
இன்ஷா அல்லாஹ் ..
நாள்: 17.08.2019 சனிக்கிழமை
நேரம்: காலை 09:00 - மாலை 05:00
இடம்: முஹ்யித்தீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
காயல்பட்டினம்.
ஏற்பாடு:
"இளைஞர் அணி" மற்றும் "முஸ்லிம் மாணவர் பேரவை"
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
காயல்பட்டினம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் துவக்கி வைக்கிறார்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. நிகழ்வின் அறிமுகவுரை ஆற்றுகிறார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. காயல்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பட்டம் படித்த இளைஞர்கள், டிப்ளமோ பயின்ற இளைஞர்கள் மற்றும் கைத்தொழில் தெரிந்த இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்கான வாய்ப்புகளை தேடிக் கொள்ளலாம். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தன்னிலை விவரக்குறிப்பு பயோடேட்டாவை கீழ்காணும் மின்னஞ்சல் இமெயில் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு மகத்தான வேலைவாய்ப்பு முகாம் கடையநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் அவருடைய ஏற்பாட்டில் நடைபெற்றது. சற்றொப்ப 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதில் பங்கேற்றனர். அந்த ஒரே நாளில் அந்த இடத்திலேயே சுமார் 850 பேர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சமய சார்பற்ற நிலையில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று இளைஞர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டுகிறோம்.
CVs to: *hameedsac69@gmail.com*
வாழ்த்துகளுடன்,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
காயல்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம்.


No comments:
Post a Comment